இந்தியா - இலங்கை கால்பந்து மோதல்!

தெற்காசிய கால்பந்து முதல் போட்டியில் இந்திய அணி,

இலங்கையை எதிர்த்து களமிறங்குகிறது.வங்கதேசத்தில் 12வது தெற்காசிய கால்பந்து தொடர், வரும் செப்., 4 முதல் 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா உட்பட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் நடப்பு சாம்பியனாக உள்ள இந்திய அணி, 7 முறை கோப்பை வென்றது. மூன்று முறை பைனலில் தோற்றுள்ளது. இம்முறை, இந்திய அணி 'பி' பிரிவில் இலங்கை, மாலத்தீவு அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை (வரும் செப்., 5) சந்திக்கவுள்ளது. 'ஏ' பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் என, நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள், செப்., 12ல் நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் செப்., 15ல் நடக்கவுள்ள பைனலுக்கு முன்னேறும். அனைத்து போட்டிகளும் பங்கபந்து மைதானத்தில் நடக்கும்.

No comments

Powered by Blogger.