வட்ஸ் அப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் குழு!

தமிழ்நாட்டில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் இருந்து நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த தகவல்கள் தமிழக காவற்துறையினருக்கு கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் உள்ளிட்ட 3 பேர் கைதாகி இருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த குழுவினர் இலங்கையில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கு, மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை ஏதிலி ஒருவரை அணுகியுள்ளமை தெரியவந்துள்ளது.

கடவுளை இழிவுப்படுத்துகின்றவர்களை கொலை செய்யும் நோக்கில் இந்த குழு செயற்பட்டுள்ளது.

மேலும் இந்த குழு வட்ஸ் எப்  சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தகுழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் நேற்று கைதாகியுள்ளதாகவும், மேலும் 8 பேர் வரையில் தேடப்பட்டு வருவதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.