ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, சில தீர்மானமிக்க அரசியல் முடிவுகள் எடுக்கபடுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் இதன்​போது, முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.