விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ்!


விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘சைவம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். இந்நிலையில், விஜய் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். விஜய் இயக்கத்தில் ‘கரு’ மற்றும் ‘லக்‌ஷ்மி’ என இரு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’, பாபா பாஸ்கர் இயக்கியுள்ள ‘குப்பத்து ராஜா’, ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாளமயம்’, ரவி அரசு இயக்கியுள்ள ‘ஐங்கரன்’ என அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்

No comments

Powered by Blogger.