ரணிலை காப்பாற்ற சுரேஸ்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களிக்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், நாடாளுமன்றில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. எனினும், கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி அண்மையில் வெளியேறியிருந்தது.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரதமர் ரணிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினருக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இதன் போது சில கோரிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி பிரதமரிடம் முன்வைத்துள்ளது.
குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த விடயங்களுக்கான பிரதமரின் பதிலை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுக்கப்படும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களிக்க மாட்டார் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவேளை பிரேரணைக்கு ஆதராக வாக்களித்தால் மகிந்த அணிக்க ஆதரவாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியி செயற்படுகின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடும். ஆகையினால் இந்த விடயத்தினையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கவனத்தில்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.