நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காது !

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.