இலங்கை தொடர்பில் ஸ்கொட்லேண்ட காவற்துறை விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை காவற்துறையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று, ஸ்கொட்லேண்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


2017ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், இலங்கையின் காவற்துறையினருக்கு ஸ்கொட்லேண்ட் காவற்துறைக் குழு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ஆனால் இலங்கையின் காவற்துறையினர் மீது துன்புறுத்தல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பில் ஸ்கொட்லாந்தின் தகவல் அறியும் சட்டத்துக்கு அமைய, த ஃபெரட் என்ற ஊடகம், ஸ்கொட்லெண்ட் காவற்துறை தலைமை கண்காணிப்பாளரிடம் விபரம் கோரியுள்ளது.

இதன்படி வழங்கப்பட்டுள்ள விளக்கத்தில், இலங்கை காவற்துறை திணைக்களத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.