நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு, நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

 முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டனர்.
Powered by Blogger.