எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சி!

எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். கூட்டு எதிரணி என்ன முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இவற்றை மாற்றி கடந்த காலத்தில் நடந்தது நினைவிருக்கும். ஜே.ஆர். ஜெயவர்தன இதனை மாற்ற முயன்றதாலேயே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் நிலைக்கு வந்தார். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். இன்றும் அதனையே செய்தால் எதிர்காலம் என்னவாகும் சம்பந்தன் போன்றோர் எம்முடன் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது முக்கியமானது.
சு.கவில் சிலர் எதிரணியுடன் இணைந்தாலும் கூட்டு எதிரணியினர் பொதுஜன பெரமுனவில் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தாலும் கூட எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படாது என்றார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவந்தாலும் ஒன்றும் நடக்காது. பிரதமருக்கு எதிராகவும் பிரேரணை கொண்டு வந்தார்கள்.
எதிரணியில் பலர் அதனை விரும்பவில்லை.
அதனை கொண்டு வந்ததால் அரசாங்கம் பலமடைந்தது. நாம் வென்றோம் என்றார்.
பிதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து பெரும்பான்மையை காண்பித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் வருமா எனவும் இங்கு வினப்பட்டது.
தலைகள் மாறினாலும் பொதுத் தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டு வென்ற கட்சி என்ற ரீதியிலே பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
இது தவறானது.பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறியே ஆசனம் வழங்கப்பட்டன. அதனை நாம் எதிர்த்தோம்.
தனித்துப் போட்டியிட்ட கட்சிகளின் அடிப்படையிலே பாராளுமன்றத்தில் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.