சு.கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற ரணில் கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். 

அரச தகவல் திணைக்களம் இதனை கூறியுள்ளது. 

இது ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் பிரதமர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.