ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தியால்கிராம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இதேபோல ஷோபியான் மாவட்டத்தின் கச்டோரா பகுதியிலும் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இதே பகுதியில் ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி முஷ்டக் அஹ்மத் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பரீதா படுகாயம் அடைந்தார். இன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 
Powered by Blogger.