கொழும்பில் ஆசிபாவின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டியும், சம்பவத்தைக் கண்டித்தும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்று (20) அமைதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
ஜக்கிய சமாதான முன்னணியின் தலைவா் மொஹம்மட் மிப்லால் இன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிறுமி ஆசிபாவின் கொலை மற்றும் அவர் மீது புரியப்பட்டதாக கூறப்படும் பாலியல் வன்முறையை என்பவற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு துாக்குத் தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.
Powered by Blogger.