தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாட்டார்கள்??

ஸ்டண்ட் யூனியன் விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாட்டார்கள், ஆனால், எந்த ஜாதி என்று பாடம் எடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
சினிமா ஸ்டண்ட் யூனியனின் 51-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த விழாவில் யூனியன் கலைஞர்களுடன் கேக் வெட்டினார். பின்னர் விஜய் சேதுபதி ரத்த தானம் செய்தார்.
அதன் பின் பாலியல் வன் கொடுமையால் கொலை செய்யப்பட்ட ஆசிபா பற்றி கூறும்போது, ‘பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும்போது பயங்கர கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்க தனியாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது. எப்படி பாடம் எடுக்கிறது என்று தெரிய வில்லை.
நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த ஜாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். இதிலிருந்து நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பத்தாது. ஆனால், தண்டனை கிடைக்கனும். இதை சப்போர்ட் பண்றவர்களை பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது’ என்றார்.
Powered by Blogger.