தென்கிழக்கு பல்கலைக்கழம் ஆரம்பம்!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கடந்த 12ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கல்வி சாரா ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தில் தமது கடமைகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 05 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். கல்வி சாரா ஊழியர்களின் கொடுப்பனவுகளை 10 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.வை. முபாறக் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகளுக்கு 03 மாத காலத்துக்குள் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன தீர்வு காணாவிடின் மீண்டும் 03 மாதத்துக்குப் பின்னர் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.வை. முபாறக் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.