கொக்குவிலில் யோகர் சுவாமிகளின் குருபூசை!

கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(01) காலை-09 மணி முதல் கொக்குவில் கிழக்கு கோணாவளை வீதியிலுள்ள யாழ். விஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. திரு.திருமதி.சுசீந்திரன் தலைமையில் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் யோகர் சுவாமிகளின் குருபூசை தீபாராதனையுடன் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகளின் பஜனை, பேச்சு, நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

குறித்த குருபூசை நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அறநெறிப் பாடசாலை நிர்வாகம் கேட்டுள்ளது. 
Powered by Blogger.