அமைச்சரவை மாற்றம் அவசியமற்றது!

அமைச்சரவை மறுசீரமைப்பொன்று தற்போதைய சூழ்நிலையில் அவசியமற்றது எனவும், எஞ்சியுள்ள 2 வருட காலத்தை உள்ள அமைச்சைக் கொண்டு சேவையாற்ற வழிவிடுமாறும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மொனராகல கும்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் பிரதமருடன் கலந்தாலோசித்து அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.