ஒன்றாய் எழுவோம் உரிமைகளை வெல்வோம்” !
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களை மூடி சிறிலங்கா
வானூர்திப் படைத் தளங்களையும், சிறிலங்கா இராணுவ முகாம்களையும் அமைத்துவிட்டு, விவசாயத்தை விருத்தி செய்யுங்கள் எனக் கூறுவது அந்தவகையில் நியாயமானது.
இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.
சிறிலங்கா அரச தலைவரின் வழிகாட்டலின் கீழ் ”ஒன்றாய் எழுவோம் இச் சிறுபோகத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபோக பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதற்கான சிறப்பு விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் அன்குரார்ப்பண நிகழ்வு ஒட்டி சுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்த நிகழவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
விவசாயத்துறையில் காலநிலைக்கு ஏற்பட பயிர்ச் செய்கைகளை செய்வதற்கான ஊக்குவிப்புக்களை முன்னெடுக்கின்ற இந்த திட்டத்தை வரவேற்கின்றேன். எனினும் இந்த நிகழ்வுக்கான தலைப்பில் சில மாற்றங்களை செய்திருக்கலாம் என எண்ணுகின்றேன். ”ஒன்றாய் எழுவோம் இச் சிறுபோகத்தை வெல்வோம்” என்பதற்குப் பதிலாக ”ஒன்றாய் எழுவோம் உரிமைகளை வெல்வோம்” என மாற்றி அமைத்திருக்கலாம்.
நான் ஏன் இதனை இப்போது கூறுகின்றேன் என்றால் முன்னைய காலத்தில் விவசாயத்தை ஊக்குவிக்க மன்னர்கள் குளங்களை அமைத்து நீர்ப் பாசனத்தை வளர்த்தனர். தற்போது அந்தக் குளங்களை இலங்கை அரச படைகள் மூடி விமானப் படைத் தளங்களையும், சிறிலங்கா இராணுவ முகாம்களையும் அமைத்துள்ளனர்.
இவ்வாறான ஆக்கிரமிப்பில் விவசாயத்தை முன்னேற்றுங்கள் என்றால் அதற்கு சாத்தியங்கள் இல்லை.
எனக்கு முன்னர் உரையாற்றியவர் நாடளாவிய ரீதியில் விவசாய துறையில் 60 வீதமான வெற்றிடங்கள் இன்று வரை நிரப்பப் படாமல் இருப்பதாக கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் இல்லாது போராடுகின்றனர். அவர்களை இந்த துறைக்குகுள் உள்ளீர்த்து வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை