வறுமையிலும் கல்வியில் இரட்டை சகோதரிகள் சாதனை!

இந்த சகோதரிகள் யார் என்று தெரிகிறதா? இவர்கள் வசதிபடைத்த பாடசாலையிலோ,வசதியான குடும்பத்தைசேர்ந்தவர்கள் என்றால் பாராட்டுமழை பொழிந்திருக்கும். ஆனால் சாதனை படைத்த இரட்டை தமிழ் சகோதரிகள். இவர்கள் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட நாவின்தன் வெளிகோட்டத்தை சேர்ந்த றாணமடு மகாவித்தியாலய மாணவிகளான அற்புதராஜா மிராளினி,அற்புதராஜா விதுசனா என்ற இந்த இரட்டைச்சகோதரிகள் கடந்த க.பொ.த சாதாரண தரத்தில் 9A சித்தி பெற்றார்கள் உண்மையிலேயே இப்படியான பின்தங்கிய கிராமத்தில் பிறந்த இந்த சகோதரிகளை வாழ்த்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையே. இந்த கிராமம் மட்டு மண்டூர் பாலமுனைவழியாக 13ம் கொலணி சங்கர் புரத்தை தாண்டியே இந்த றாணமடு எனும் எல்லைக்கிராமம் அமைந்திருக்கிறது. இதில் 13ம் கொலணி மட்டுமாவட்டமும் பக்கத்து றாணமடு கிராமம் அம்பாறை மாவட்டமும் என்பது குறிப்பிட வேண்டும்.
Powered by Blogger.