பிரபல டிவி நடிகை எரித்துக்கொலை..?
பூட்டிய வீட்டில் நடிகை ஒருவர் உடல் கருகி இறந்துள்ள சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பால்கொட்டை சேர்ந்தவர் பிஜேஷ் இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார்.
ஏராளமான டிவி குறும்படங்களில் நடித்துள்ளார் கவிதா. இந்நிலையில் கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்த பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் கவிதா.
பின்னர் தனது மகளுடன் நிலம்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
மேலும் தற்போது பள்ளி விடுமுறை என்பதால், தனது மகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தனியாக பொழுதை கழித்து வந்துள்ளார் கவிதா.இந்நிலையில் நேற்று காலை,கவிதா தங்கி இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அடர்ந்த கரும்புகை வந்துள்ளது.பின்னர் கதவை உடைத்து பார்த்த போது கவிதா கருகிய நிலையில் இருந்துள்ளார். கையில் மின்சார ஒயர் இருந்துள்ளது. மேலும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதற்கான அடையாளமும் இருந்துள்ளது
பின்னர் காவல் நிலையத்தில் பகார் அளிக்கவே பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஒரு டிவி நடிகை திடீரென இது போன்று மர்மமான முறையில் இறந்த சம்பவம் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இது குறித்த விசாரணை மேற்கொண்டதில், கவிதா பெங்களூரில் தனியாக ஒரு அழகு நிலையம் தொடங்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து அதற்காக பணத்தை திரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
ஆனால் அவருக்கு தேவையான பணம் கிடைக்காததால் சில நாட்களாகவே தனிமையில் மன அழுத்தத்துடன் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே கவிதா மன அழுத்தம் காரணமாக தன்னை தானே எரித்து கொண்டாரா அல்லது வேறு யாராவது முன் விரோதம் காரணமாக கொலை செய்து விட்டனரா என்ற பாணியில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை