விண்மீன்களின் விழிப்புணர்வு பேரணி!

விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையேழுத்திடும் நிகழ்வு இன்று (21.04.2018) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் கலந்து கையேழுத்திட்டு இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையேழுத்திட்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
இவ் பேரணியானது 21,22,23 ஆகிய தினங்களில் ஏ9 வீதியுடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக இன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது.
அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன் , இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவக்கச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது.
இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம் , நாச்சிமார் கோவிலடி , நல்லூரடி , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.


Powered by Blogger.