மூன்று நாட்கள் தொடரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி நேற்று (04) சிறப்பாக ஆரம்பமாகியது.
வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்புடன் மாபெரும் மருத்துவக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனா;.
யாழ்.மருத்துவபீட வளாகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சியானது, இன்று (05)   நாளை  (06) மற்றும் 07 ஆம் திகதி ஆகிய  3 நாட்கள் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியானது 5 வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பீட மாணவர்களினால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.