ஐ.பி.எல்., தொடருக்கு, 'டிவி' ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஐ.பி.எல்., தொடருக்கு, 'டிவி' ரசிகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு
ஆண்டும் அதிகரித்து வருகிறது. இம்முறை விளையாடிய முதல் 8 போட்டிகளை 21.39 கோடி ரசிகர்கள் பார்த்தனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 8.1 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு, முதல் 8 போட்டிகளை 19.78 கோடி பேர் மட்டுமே பார்த்திருந்தனர்.இம்முறை சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியை 3.59 கோடி ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு நடந்த ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோதிய முதல் போட்டியை 2.83 கோடி ரசிகர்கள் மட்டுமே கண்டிருந்தனர்.கடந்த ஆண்டு, ஐ.பி.எல்., போட்டிகளை ஒளிபரப்பு உரிமம் பெற்றிருந்த சோனி நிறுவனம், ஐந்து சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தது. ஆனால் இம்முறை ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் நிறுவனம், தனது 10 சேனிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. தவிர, 'டிடி' ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்பாகிறது.

Powered by Blogger.