எம்.கே கசுன்- மனைவி பிணையில் விடுதலை!

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும், கடுவெல நீதவான் , மேலதிக மாவட்ட நீதிபதி பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.