மிரட்டும் பிரபுதேவா..!

பிரபுதேவா நடித்துள்ள மெர்குரி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிகிறது. கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சைலண்ட் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. வசனங்களே இல்லாமல் இசையின் மூலம் மட்டுமே காட்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், ஷனத் ரெட்டி, தீபக் பரமேஷ், மேயாத மான் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். சினிமா துறையினரின் வேலைநிறுத்தத்தையும் மீறி இந்த பட, வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.