சித்திரைப் புத்தாண்டுக்கு விசேட பஸ் சேவை!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (06) முதல் விசேட பஸ் சேவைகளை வழங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் பஸ் சேவை இடம்பெறும் என, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையானது,  மேலதிகமாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசேட பஸ் சேவையானது, எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர், ஜி.எச்.ஆர்.ஜி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.