காலி கராப்பிடிய மருத்துவமனை மருத்துவருக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி !

இங்கிலாந்தின் இருதய மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான விசேட மருத்துவர், ரிச்சட் பர்மினுக்கு மீண்டும் காலி கராப்பிடிய போதனா மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 மருத்துவ சபையின் அனுமதி கிடைக்கப் பெற்றதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கராப்பிடிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜயம்பதி சேனாநாயக்கவினால் சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில்  மருத்துவமனையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
Powered by Blogger.