கனகராயன்குளம் பகுதியில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் பலி!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் 22 வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். 

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது. 

இதனையடுத்து, குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.