தமிழகத்துக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் போன்ற திட்டங்களை கைவிட தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்கொரிய வாழ் தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். தென்கொரியாவின் சோல் மற்றும் சுவோன் நகரங்களைச் சுற்றியுள்ள தமிழர்கள் சுங்யோன்குவான் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடி அருகிலுள்ள இல்-ஓல் பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள ஆபத்தான திட்டங்களை கைவிட வலியுறுத்தி விண்ணப்பம் தயாரித்து கையெழுத்திட்டு தென் கொரியாவுக்கான இந்தியத் தூதரகத்தில் சமர்ப்பித்தல் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். விரைவில் தென்கொரியா வாழ் தமிழர்கள் அனைவரிடமும் கலந்து இந்த விண்ணப்பத்தை தயாரித்து அளிக்க அவர்கள் முடிவெடுத்தனர். இந்தப் போராட்டம் சுமார் ஒருமணி நேரம் கண்டன முழக்கங்களும், கலந்துரையாடலும் என நடைபெற்றது. குறிப்பாக ஸ்டெர்லைட் உள்ளிட்டவை குறித்து ஆரோக்கியராஜும், மக்களின் அரசியல் விழிப்புணர்வே அவர்களின் எதிர்காலம் என வேலு அரசும், தமிழ் பண்பும் கொரிய மக்களின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் சரவணனும், பொருளாதார அடியாட்கள் என்ற தலைப்பில் சைலசா சரவணனும் பேசினர்.
Powered by Blogger.