இரத்தினபுரியில் மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை!

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து எஹலியகொடஇ எலபாத்தஇ குருவிற்ற மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 
இந்த பிரதேசங்களுக்கு எதிர்வரும் சில மணித்தியாலங்களிலும் கூடுதலான ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடவளவ்வ நீர்த்தேக்கத்தின் நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளை நேற்றிரவு 7 மணி அளவில் திறந்ததாக உடவளவ்வ மகாவலி நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்தார்.
 
எனவேஇ வளவை கங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு  பொறியியலாளர் சுஜீவ குணசேகர கேட்டுள்ளார்.
Powered by Blogger.