ஜேர்மனியில் இரு தொடர்ருந்தில் மோதல் – பலர் படுகாயம்!

ஜேர்மனியில் உள்ள சுரங்கத்தில் இரு தொடர்ருந்தில் மோதிய விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.ஜேர்மனி நாட்டில் சுரங்க தொடர்ருந்தி  சேவை செயல்பட்டு வருகிறது. ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டூயிஸ்பர்க் நகரில் சுரங்க தொடர்ருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Powered by Blogger.