போதை தெளிவதற்குள் பலமுறை செய்த கொடூரம்!

இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்துப் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குச் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருவது பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதுவும் தலைநகரில் இப்படி பட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் நேற்று முன்தினம்  இரவு செக்டார் 126 என்ற இடத்திலிருந்து நோய்டாவிற்கு கால் டாக்சி ஒன்றை புக் செய்திருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த அந்த டாக்சியில் அவருடைய நண்பர் பிரவீண் என்பவரும் இருந்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு டாக்சி புறப்பட்டது.
கிரேட்டர் நோய்டாவின் ஜார்சா என்ற காட்டுப் பகுதிக்குச் சென்ற போது ஓட்டுநர் அசோக் திடீரென டாக்சியை நிறுத்திவிட்டு ஓட்டம் ஓடிவிட்டார், பின்னர் டாக்சியில் இருந்த பிரவீண் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளார். இதனையடுத்து மது போதை அதிகமான நேரம் பார்த்து  அந்த பெண்ணை ஆடைகளை அகற்றிவிட்டு கற்பழித்துள்ளார். போதை தெளிவதற்குள் பலமுறை அந்தபெண்ணை கற்பழித்துள்ளார். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு வேறு ஒரு டேக்சி புக் செய்து தப்பித்து ஓடிவிட்டார். இதனையடுத்து மது போதை தெளிந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஆறு பேருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டேக்சி ஓட்டுனர், மற்றும் அவரது நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல கேரளாவிலும் கடந்த ஜனவரி 30ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரை அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்து கூட்டுப் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது குறுப்பிடத்தக்கது.
Powered by Blogger.