அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் சம்­பளம் நாளை!

தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை 09ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதி­பர்கள், ஆசி­ரி­யர்­கள் நாளைய தினம் சம்­பளம் பெற­வுள்­ளனர். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா 10 ஆயிரம் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வழங்­கப்­பட்ட பண்­டிகை முற்­பணம் வட்­டி­யற்ற 8 சம­பங்கு மாதங்­களில் மீள அற­வி­டப்­ப­ட­வுள்­ளது.
இதே­வேளை, தமிழ்– சிங்­கள புத்­தாண்­டை­யொட்டி நாட­ளா­விய ரீதியில் விஷேட பஸ், புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. புத்­தாண்­டுக்கு முன்­னரும், புத்­தாண்டைத் தொடர்ந்­து­வரும் நாட்­க­ளிலும் பொது­மக்கள் இல­கு­வாக போக்­கு­வ­ரத்துச் செய்யும் பொருட்டு, விஷேட பஸ், புகையிரத போக்குவரத்து ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.