சென்னையை கலக்கும் விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் “பைக் ரேஸ்” காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி, கத்தி என்ற மெகா ஹிட் படங்களை அடுத்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்தப்படத்தை சண் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது. இதில் ராதாரவி, பழ.கருப்பையா வில்லன்களாக நடிக்கிறார்கள். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இப்படத்தின் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பின்னர் கொல்கத்தாவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்றது. கடந்த மாதம் தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் சிறப்பு அனுமதி வாங்கி படபிடிப்பு நடந்தது.
தற்போது தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படங்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. படத்தின் படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டுவருகின்றன. அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோட்டர் சைக்கிளில் பயணிக்க, முன்னணியில் விஜய் பயணிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. அந்தக் காட்சிகளை ரசிகர்கள் செல்போனில் படம்பிடித்து ட்விட்டர், ஃ பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரளாகி வருகிறது.
Powered by Blogger.