உண்ணா விரதத்தை கைவிட்டார் அரசியல் கைதி!

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லைக்­குள் தனிச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பு போராட்­டத்தை நேற்று நிறைவு செய்­தார். தனிச்­சி­றை­யி­லி­ருந்து பொதுச் சிறைக்கு மாற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­தை­ய­டுத்து உணவு ஒறுப்­புக் கைவி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணம் சுன்­னா­கம் பகு­தியை சேர்ந்த இரா­பல்­ல­வன் தபோ­ரூ­பன்(வயது 36) என்­ப­வர் 2009 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். உடல்­நிலை பாதிக்­கப்­பட்­ட­தால் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வ­தற்­காக யாழ்ப்­பாண சிறைச்­சா­ லைக்கு மாற்­றப்­பட்­டார்.
ஆனால், அவர் சிறை­யி­லி­ ருந்து தப்­பிக்க முற்­பட்­டார் என்று குற்­றஞ்­சாட்டி 2013 ஆம் ஆண்டு அநு­ரா­த­பு­ரம் சிறைக்கு மாற்­றப்­பட்­டார். அங்கு மாற்­றப்­பட்ட நாளி­லி­ருந்து சிறைச்­சா­லை­யில் தனி அறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். அத­னால் கடும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­னார். தன்­னைத் தனியே வைத்­தி­ருக்­காது ஏனைய கைதி­க­ளு­டன் இருக்­க­வி­டு­மாறு பல தரப்­புக்­க­ளி­டம் கோரி­யி­ருந்­தார். பதில் கிடைக்­க­வில்லை. சக கைதி­க­ளு­டன் இருக்க விடு­மா­று­கோரி சில தினங்­க­ளுக்கு முன்­னர் தொடக்­கம் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில், குறித்த கைதி யாழ்ப்­பாண சிறைச்­சா­லை­யில் இருக்­கும்­போது தப்­பிக்க முயற்­சிக்­க­வில்லை என்று யாழ்ப்­பாண சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து கடி­தம் அநு­ரா­த­பு­ரத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அத­னைக் கொழும்­பி­லுள்ள தலைமை அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தால் அவ­ரது கோரிக்கை மிக விரை­வில் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­ப­டும் என்ற சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளின் உறு­தி­மொ­ழிக்கு அமைய உணவு உறுப்பு கைவி­டப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
Powered by Blogger.