கேரளக் கஞ்சாவுடன் நால்வர் கைது!

வத்தளை, ஹேகித்தப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 150 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் நால்வர், இன்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ​ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Powered by Blogger.