கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும்!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முதன்­மைச் சுற்­றுலா மைய­மாக விளங்­கும் கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும். எனி­னும் இரவு 6 மணி­வரை மட்­டுமே கட­லில் நீராட முடி­யும்.
இந்த நடை­முறை நேற்று முன்­தி­னம் தொடக்­கம் நடை­ மு­றை­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் காரை­ந­கர் பிர­தேச சபை உப தவி­சா­ளர் க.பாலச்­சந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது:
காரை­ந­கர் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்­றது. அபி­வி­ருத்தி சம்­மந்­த­மான பல முன் மொழி­வு­கள் வைக்­கப்­பட்­டன. உப தவி­சா­ள­ரால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­யின் கீழ் பிர­தேச சபை அமர்­வில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்­க­மைய நேற்று முன்­தி­னம் தொடக்­கம் இரவு 7 மணி­வரை கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­துக்கு மக்­களை அனு­ம­திப்­பது தொடர்­பான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
இரண்டு மாத காலப்­ப­கு­திக்­குள் கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையம் மின்­னொ­ளி­கள் பொருத்­தப்­பட்டு இரவு 10 மணி­வரை சுற்­றுலா பய­ணி­கள் பாவ­னைக்கு விடப்­ப­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றோம் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.