யாழிலிருந்து புறப்பட்ட பேரூந்தி்ல் போலி நாணயத்தாள்கள்!

வவுனியா நோக்கி யாழில் இருந்து  சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் தீடீர் சோதனை  நடத்திய போது பெருந்தொகை கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பயணியிடம் இருந்து 45, 1000 ரூபாய் பணத்தாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான அலவ பிரசேத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேகம் நபர் பணம் பெற்று செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.