உலகத் தமிழ் மக்களே!முகநூலில் பரப்பிவரும் புகைப்படத்திற்கு ஏமாந்திடாதீர்கள்!.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் புகைப்படத்தை எரி்த்திரிய தலைவரின் புகைப்படத்தோடு  இணைத்து,அதனை தலைவரின் அரிய புகைப்படம் என சிலர் முகநூலில்  பரப்பி வருகின்றனர்.இது எமது மக்களைக் குளப்பத்திற்குள் உட்படுத்துவதாக அமையும்.  போலிப் புகைப்படம் என்பதனை தெளிவுபடுத்துவதற்காக இத் தகவலை வெளிவிடுகின்றோம்..

எரித்திரியாவின் யனாதிபதி 'இசயாசு அஃப்வெர்கி' (Isaias Afwerki) அவர்கள் இந்தப் புகைப்படத்தின் நடுவில் உள்ளார். 1993இல் எரித்திரியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இன்றுவரை எரித்திரியாவின் யனாதிபதியாக இருந்துவருகிறார். அந்நாட்டின் தலைவர், அரசாங்கத்தின் அதிபர், எரித்திரிய பாதுகாப்புப் படைகளின் தலைமை போன்ற நிலைகளைத் தொடர்ந்து அவரே தலைமைவகித்து வருகிறார். 1991 இல் எரித்திரியாவுக்கு வரலாற்று விடுதலை வெற்றியை ஈட்டிக்கொடுத்து, 1993இல் சுதந்திரத்தை ஈட்டிக்கொடுத்த தலைவரும் இவரே.

இதில் இணைத்திருக்கும் புகைப்படத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் புகைப்படத்தை இணைத்து, தலைவரின் அரிய புகைப்படம் என சிலர் முகநூலில் பரப்பி,
எமது மக்களைக் குழப்பத்திற்குள் உட்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறான போலிப் புகைப்படம் உண்மை என பலர் நம்பிவருவதை நாம் அவதானித்தோம்.
அந்தப்படத்தின், அசல் இணைப்பையும் கீழே இணைத்துள்ளோம். . இதுபோன்ற விசமப் பரப்புரைகளை உண்மையுள்ள.  ஒவ்வொருவரும் புறக்கணிக்க வேண்டும்.
போலிகளைப் பரப்பி, வரலாற்றைப் பிழையாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் பதியப்பட நாம் காரணமாக அமைந்துவிடக் கூடாது!
அது எமக்குப் பெருமை இல்லை, மாறாக இழிவையும் பிற இனத்தவர்கள் மத்தியில் நகைப்பையும் தான் சம்பாதிக்கும்!
ஆகவே, தேசியத் தலைவரின் புகைப்படத்தை வெட்டிக் கொத்தி இன்னுமொரு நபருடன் இணைத்து தங்கள் ஆர்வக் கோளாற்றை வெளிப்படுத்துவதை தயவுசெய்து இத்துடன் நிறுத்துங்கள்!
http://www.tamilarul.net/2016/04/a-false-narrative-to-make-ethiopians.html


http://www.tigraionline.com/articles/esat-false-narrative.html


Powered by Blogger.