பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை உஷா!
சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்
தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் தெரிவிதுள்ளார்.
கடந்த சில நாட்களாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்த படுக்கை விவகாரம் குறித்து தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கிய புள்ளிகளின் லீலையை அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பிபிசி ஆவண படத்தில் பேசியுள்ளார். அந்த ஆவண படத்தில் கூறியிருப்பதாவது,“திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சாதாரணமானது தான். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் என்னிடம் பணம் இல்லையே என்றேன்? அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அந்த வாய்ப்பை நான் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார்.
அதேபோல சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த பெண் ஒருமுறை மட்டுமல்ல பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களாம். அவர் வாய்க்க்பக்காக சென்ற மற்றொரு இடத்தில் நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். காஸ்டிங் ஏஜென்ட் அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டு முத்தமிட்டார், எனது ஆடைக்குள் கையை விட்டார். பர்சனல் பார்ட்டில் கைவைத்தார். இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு சினிமாவில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட என அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார் என அந்த நடிகை கூறியுள்ளார்.
.jpeg
)





கருத்துகள் இல்லை