விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிடம்!

விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிடம் ஒன்று, “ஒன்றாய் எழுவோம் இச்சிறுபேகாகத்தை வெல்வோம்” எனும் தொணிப்பொருளின் கீழ் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் களுமுந்தன்வெளியில் வியாழக்கிழமை (26ம் திகதி) நடைபெற்றது.

இதன்போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் பயிர் செய்வோம், சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி வினைத்திறனாகப் பயிர் செய்வோம், அனைத்து பயிர் இடக்கூடிய இடங்களிலும் பயிர் செய்வோம், உள்ளீடுகளை வினைத்திறனாகப் பயன்படுத்திடப் பயிர் செய்வோம், போன்ற விவசாய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பேராணியாக வந்து விப்புணர்வில் ஈடுபட்டனர்.


  • .சிறுபோகத்தில் ஆரம்ப மழையுடன் நிலத்தைப் பண்படுத்தி குளத்து நீழரை மீதப்படுத்தி பயிரின் இறுதிப் பருவத்தில் நீர் பற்றாக்குறைவைத் தவிர்த்தல்.
  • சிறுபோகத்தில் நீர் பற்றாக்குறைவினால் ஏற்படக்கூடிய பாதிப்புப்புக்களைக் குறைப்பதற்கு குறுகிய கால வரட்சியைத் தாங்கக்கூடிய வளரக்கூடிய நெல் வகைகளை நடுதல்.
  • நெல் பயிரிட போதியளவு நீர் இல்லாத போது குறுபகிய கால வயதுடைய ஏனைய உணவுப் பயிர்களை நடுதல்.
  • எப்போதும் மண் நீர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல்.நுண் நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல விடையங்கள் தொடபாவவும்,


சாத்தியமான அனைத்து இடங்களிலும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப யுக்திகளைக் கையாண்டு பயிர்ச் செய்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக இதன்போது அப்பகுதிவாழ் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டன.

விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில், விவசாயப் போதனாசிரியர் என்.விவேகானந்தராஜாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.சிவபாதம், மாணவர்கள், விவசாயிகள், மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




Powered by Blogger.