சட்டவிரோதமான மணல் கடத்தியவர் கைது!

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


கடத்தலுக்காக பயன்படுத்திய டிப்பர் ரக வாகனத்தையும் மீட்டுள்ளதாக,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Powered by Blogger.