பண்டிகைக்காலத்தில் சுற்றுலாப் பயணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மழையுடனான காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதுகுறித்து அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.  பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா பயணங்களின் போது நீர்நிலைகளில் நீராடும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதானம் இன்றி செயற்பட்டதன் காரணமாக கடந்த தினங்களில் பல சோகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, கடந்த சனிக்கிழமை கண்டி  பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையின் கிளை ஆறான தலு ஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இருவர் உயிரிழந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 இதனிடையே, இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், சம்பரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மாற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.