ஊடகவியலாளர் அமரர் அராலியூர் ரூபன் அவர்களின் நினைவை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி!

ஊடகவியலாளர் அமரர் அராலியூர் ரூபன் அவர்களின் 8 ஆவது வருட நினைவை முன்னிட்டு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரதன் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் பொன்னாலை வெண்கரம் படிப்பகத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் மரதன் ஓட்டப்போட்டி பொன்னாலைச் சந்தி, வட்டுக்கோட்டைச் சந்தி, மாவடிச் சந்தி, மூளாய் வீதியூடாக மீண்டும் பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் முடிவடையும்.
இப்போட்டியில் பொன்னாலை ஜே-170 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும்.
Powered by Blogger.