தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த செயல்!

பிரபல காமெடி நடிகர், தாடி பாலாஜியின் மனைவி நித்யா பொது மக்கள் நலனுக்காக எடுத்துள்ள ஒரு முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த வாரம் முழுவதும் சாலை விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச தலைகவசம் வழங்கபட்டது.
இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள ரேயான் தலைகவசம் விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை இணைந்து தலைகவசம் அணிவதின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர் மேலும் அப்பகுதியில் தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு  இலவசமாக தலைகவசம் வழங்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரேயான் நிறுவனத்தின் தலைவர் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் மரணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும். போக்குவரத்து காவல்துறையினர் பல வழிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் ஆனாலும் பலர் சாலை விதிகளை மதிக்காமலும் ,தலைகவசம் அணியாமலும் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே தங்கள் கடையில் அனைத்து தரப்பினரும் பயபன்டுத்தும் வகையில் பலவித மாடல்களுடன் தலைகவசம்  குறைந்த விலைகளில் கிடைக்கும் என்று கூறிய அவர் பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். 
மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தானாம். இவர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Powered by Blogger.