தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு!

தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. 

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளார். 

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அதிகாரம், பணிகள் மற்றும் கடமைகள் சம்பந்தமாக முறைப்படுத்துதல், தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலங்கை கணக்காய்வு சேவையை ஸ்தாபித்தல், அரச நிதி சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்களை சரியாக வகைப்படுத்தல் மற்றும் அது சம்பந்தமான விடயங்களை நெறிப்படுத்த திட்டமிடுதல் ஆகிய விடயங்களை இந்த சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.
Powered by Blogger.