தமிழர்களின் வாழ்விலே கூட்டுறவு என்பது வாழ்வோடு ஒன்றிணைந்தது!

சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட போரினால் அழிந்து போன எமது வாழ்வை மீள உயர்த்தியதில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு அளப்பரியது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று கரைச்சித்தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கடற்பொருள்சார் விற்பனைநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில் தமிழர்களின் வாழ்விலே கூட்டுறவு என்பது எமது வாழ்வோடு ஒன்றித்து போனது போர் நடைபெற்ற காலத்திலும் எமது பொருளாதார வளர்சியிலும் கூட்டுறவு ஆற்றியபங்கை மறந்து விட முடியாது போரின் பின்னர் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி என்பது அபரீதமானது தற்போதுள்ள ஆளுமை நிறைந்த இயக்குநர் சபை மற்றும் முகாமையாளர் பணியாளர்கள் ஆகியோரினது கூட்டுபங்களிப்புடன் சிறப்பாக செயற்படுவது போற்றுதற்குரியது என்றார்.
Powered by Blogger.