யாழ் மந்துவில் வாள்வெட்டில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் கொடிகாகமம் மந்துவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளனர்.
இரவு 9.50 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மந்துவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.