சிகரெட் தொகைகளுடன் டுபாய் நாட்டில் இருந்து வந்தவர் கைது!

சட்ட விரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு சிகரெட் தொகைகளை கொண்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சிக்கரட் தொகைகளின் பெறுமதி 1, 530, 000 ரூபாய் என சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுங்க பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.