த.தே.கூட்டமைப்பில் சுரேஸ் மீள இணைய ஏற்ப்பாடு!


தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ் மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணை விரும்பினால் அதனை சாதகமாக பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காலத்துக்கு காலம் கட்சிகள் வந்து சேர்ந்திருக்கின்றன. அதே போன்று காலத்தக்கு காலம் கட்சிகள் வெளியேறியும் போயிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சியையும் வெளியேற வெண்டுமென்று எந்தக் காலத்திலும் நாங்கள் சொன்னது கிடையாது. அவர்கள் தாங்களாகவே வெளியோறிப் போயிருக்கின்றார்கள். அவ்வாறு போகின்றவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தியதும் கிடையாது. ஆகவே வெளியேறிப் போனவர்கள் வர வேண்டுமென்று சொன்னால் அதனைப் பரிசீலிப்பதற்கு நாங்கள் தயார் என சுமந்திரன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.