அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் !

தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஆந்திராவுக்கு செல்லும் வாகன உற்பத்தி முதலீடுகள். இதனால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக அரசு மீது குற்றச்சாட்டி உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு கடந்த ஓராண்டில் வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. இந்த முதலீட்டாளர்களைக் கவர ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விரும்பிய நிறுவனங்களை தமிழக ஆட்சியாளர்கள் விரட்டியடித்தனர் என்பது தான் இதற்கு காரணமாகும்.

Powered by Blogger.